ARCH OPENNING FUNCTION
GBHSS MOHANUR FRONT LOOK
மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளி நுழைவு வாயில் திறப்பு விழா 1983இல் 10ஆம் வகுப்பு, 1985இல் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா, முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நாமக்கல் கிரீன்பார்க் கல்வி நிறுவன இயக்குநரும், முன்னாள் மாணவருமான எஸ்.குருவாயூரப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் கே.வையாபுரி, என்.நடராஜன், எஸ்.முருகையா முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர், பொட்டிரெட்டிபட்டி ஸ்ரீரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் பி.கே.சுப்ரமணி வரவேற்றார்.
ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட நுழைவு வாயிலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் திறந்து வைத்தார். விழாவில், முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில், முன்னாள் மாணவ, மாணவியர், தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தங்களது பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

Comments
Post a Comment